For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸி. செல்ல முயற்சி-மலேசிய கடல் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட 75 இலங்கை தமிழர்கள்

By Chakra
Google Oneindia Tamil News

Asylam Seekers
கோலாலம்பூர்: ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் அடையும் நோக்கில் சென்ற 75 இலங்கைத் தமிழர்கள் சென்ற படகு மலேசியா கடல் பகுதியில் பழுதடைந்தது. இந் நிலையில் அவர்களை மலேசியா கடலோரக் காவல்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

மலேசிய கடலோரக் காவல்படையினர் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தி வரும் நிலையில் படகில் உள்ளவர்கள் இறங்க மறுத்து வருகின்றனர்.

மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடலாம் என்பதால் தமழர்கள் தரையிறங்க மறுத்து வருகின்றனர்.

தரையிறங்க வேண்டுமானால், தங்களை மலேசியாவே அகதிகளாக ஏற்று கொள்ள வேண்டும் அல்லது தங்களை ஏற்கக் கூடிய ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்-திருமா

இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இந்த விவகாரம் தொடர்பாக விடுத்துள்ள அவசர அறிக்கை:

மலேசியாவில் ஈழத் தமிழர்கள் மொத்தம் 75 பேர் பினாங்கு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிங்கள இனவெறியர்களின் வதைக்குள்ளாகி, ஆனந்தக்குமாரசாமி முகாம் மற்றும் அருணாசலம் முகாம் ஆகிய முகாம்களிலிருந்து வன்னிப் பகுதிக்கு மீள் குடியேற்றம் செய்வதற்காக அனுப்பப்பட்டவர்கள் எனத் தெரிகிறது.

வதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும் மீள்குடியேற்றத்திற்கான எத்தகைய அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் 'அம்போ'வென விடப்பட்டிருக்கிறார்கள்.

அவரவர் சொந்த கிராமங்களுக்குச் சென்று குடியேறுவதற்கு அங்கே கிராமங்களுமில்லை; கிராமங்கள் இருந்ததற்கான வடுக்களும் இல்லை. சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் வன்னியில் தமது ராணுவ முகாம்களை நிலைகொள்ளச் செய்து பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கே ஒரு குடிசை அமைத்து முடங்கிக் கொள்ளலாம் என்று எண்ணுவதற்குக்கூட இயலாத நிலை உள்ளது.

இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் எங்கோ ஒரு தேசத்தில் அகதிகளாய் அடைக்கலம் ஆகலாம் என்னும் மன நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த 19.Š4.Š2010 அன்று ஒரு படகின் மூலம் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் மலேசியாவை நோக்கிப் பயணம் செய்துள்ளனர்.

சிங்கள இன வெறியர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்தால் போதும் என்னும் மன நிலையில், அயல்நாட்டாரின் கருணை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் பயணித்துள்ளனர்.

எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழலில் அவர்கள் பயணம் செய்த படகு பழுதாகி பாதியிலேயே நின்று போயுள்ளது. அது ஒரு சாதாரணப் படகு என்பதனால் எந்த நேரத்திலும் கடலில் மூழ்கலாம் என்கிற ஆபத்து இருந்தது.

இந்த நிலையில் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென அவர்கள் நடுக்கடலில் இருந்தபடியே உலக நாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கோரிக்கை வைத்துக் கதறியிருக்கின்றனர்.

கடந்த 23Š4Š2010 அன்று விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இத்தகவல் எட்டியது. அதனடிப்படையில் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியதுடன் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல்படுத்தியிருக்கிறோம்.

அத்துடன் அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு உதவ வேண்டுமென மலேசியாவைச் சேர்ந்த அமைப்புகளைத் தொடர்பு கொண்டு வேண்டுகோள் வைத்தோம்.

தற்போது அவர்களைக் கைது செய்துள்ள மலேசிய அரசு அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி விடுவார்களோ என்கிற பேரச்சம் உலகத் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை கருணை உள்ளத்தோடு அகதிகளாய் ஏற்று அடைக்கலம் அளிக்க வேண்டும். மாறாக, இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால் அது ஈவிரக்கமற்ற கொடுஞ் செயலாக அமையும். எனவே தமிழக அரசும், இந்திய அரசும் உடனடியாக இதில் தலையிட்டு அவர்களை மலேசியாவிலேயே தங்கச் செய்வதற்கு மலேசிய அரசை வற்புறுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இது தொடர்பான கோரிக்கை விண்ணப்பத்தினை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழகத்திலுள்ள மலேசியத் தூதரகத்தில் சமர்ப்பிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

புலி தலைவர்களை நாடு கடத்தினோம்-மலேசியா

இந் நிலையில பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு, மலேசியாவுக்கு அடைக்கலம் தேடி வந்த விடுதலைப் புலி தலைவர்கள் பலரை கைது செய்து, நாடு கடத்தினோம் என்று மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்த நாடு அறிவித்தது. அந்த போருக்குப் பிறகு 2009ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஏராளமான பேர் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தனர். அவர்களை கைது செய்து, நாடு கடத்தி விட்டோம்.

ராஜபக்சே தம்பி பாராட்டு:

சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்த சர்வதேச பாதுகாப்புத்துறை கண்காட்சியில் இலங்கை அதிபரின் சகோதரரும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபய ராஜபக்சே கலந்து கொண்டார்.

அப்போது அவர் மலேசியாவில் அடைக்கலம் புகுந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை கைது செய்து நாடு கடத்திய மலேசிய அரசை மிகவும் பாராட்டினார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நாடு கடத்தப்பட்டவர்கள் யார், யார் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X