For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க வருமான வரம்பு அதிகரிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாடுகளில் படிக்க உதவித்தொகை கோரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1.44 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

சட்டசபையில் தனது துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அவர் பேசுகையில்,

தற்போது மருத்துவப் படிப்பு பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ- மாணவியர்களுக்கு ரூ.7,000 உயர்கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

அதில் 75 சதவீதம் மானியமாகவும், 25 சதவீதம் கடனாகவும் வழங்கப்படுகிறது. இனிமேல் இது 100 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ- மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்படுகிறது.

10ம் வகுப்புக்கான முதல் பரிசு ரூ.25,000 ஆகவும், இரண்டாம் பரிசு ரூ.20,000 ஆகவும், மூன்றாம் பரிசு ரூ.15,000 ஆகவும் வழங்கப்படும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் முதல் பரிசு ரூ.50,000 ஆகவும், இரண்டாம் பரிசு ரூ.30,000 ஆகவும், மூன்றாம் பரிசு ரூ.20,000 ஆகவும் வழங்கப்படும்.

இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் பெற வருமான வரம்பானது கிராமப் பகுதிகளுக்கு ரூ.16,000 எனவும், நகர்ப் பகுதிகளுக்கு ரூ.24,000 எனவும் உள்ளது. இது கிராமப் பகுதிகளுக்கு ரூ.30,000 ஆகவும், நகர்ப்பகுதிகளுக்கு ரூ.50,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிடர் குடும்பத்திற்கான ஈமச்சடங்கிற்கான உதவித் தொகை ரூ.500ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படுகிறது

மாநிலம் முழுவதும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 புதிய விடுதிகள் துவக்கப்படும்.

வெளிநாடுகளில் படிக்க உதவித்தொகை கோரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1.44 லட்சமாக இருக்க வேண்டும் என்ற வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உதவி செவிலியர் வேலைக்கு வாய்ப்பு அதிகமிருப்பதால் 250 பேருக்கு பயிற்சி நிறுவனங்கள் மூலம் ரூ.50 லட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும்.

500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு அழகுக் கலை பயிற்சி வழங்கப்படும். 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தையல் கலை பயிற்சி வழங்கப்படும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்ற தேவைப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய 500 பேருக்கு ரூ.17.50 லட்சம் செலவில் பயிற்சிகள் வழங்கப்படும்.

கிராமப்புற இளைஞர்களும் ஆங்கிலத்தில் பேசும் திறமையை வளர்க்க, 4,000 ஆதி திராவிடர் கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.

160 ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளிகளுக்கு குடிதண்ணீர் தூய்மைப்படுத்தும் கருவிகள் ரூ.28.80 லட்சம் செலவில் வழங்கப்படும்.

26 ஆதி திராவிடர் நல பெண்கள் விடுதிகளுக்கு ரூ.10.40 லட்சம் செலவில் கணினிகள் வாங்கப்படும்.

66 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல் நிலைப் பள்ளிகளுக்கு ஆய்வுக்கூட உபகரணங்கள் ரூ.33 லட்சம் செலவில் வழங்கப்படும் என்றார் தமிழரசி.

ஆதி திராவிடர் ஆணையம் குறை கூறியது ஏன்?:

முன்னதாக நேற்று நடந்த விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கலைராஜன், தேசிய ஆதி திராவிடர் ஆணையம் தமிழகத்தில் ஆய்வு நடத்திய போது தமிழக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த தமிழரசி, கடந்த 18-2-2010 அன்று தேசிய ஆதி திராவிடர் ஆணையம் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அதற்கு முன்பாக அந்த ஆணையம் ஒரு கேள்விப் பட்டியலை அனுப்பி அதன் அடிப்படையில்தான் ஆய்வு நடைபெறும் என்று கூறியிருந்தது.

ஆணையம் அனுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசின் பதில்கள் 16-10-2009 அன்று அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், ஆணையம் 18-2-2010-ல் தான் ஆய்வு மேற்கொண்டது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பற்றிய புள்ளி விவரங்கள் மாவட்ட மற்றும் வார்டு வாரியாக இல்லை என்றும் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது சட்டத்துக்கு புறம்பானது என்றும் ஆணையம் குறை கூறியது.

முன்கூட்டியே மாவட்ட மற்றும் வார்டு வாரியாக புள்ளி விவரங்களைக் கேட்காமல், ஆய்வுக்கு வந்த பிறகு கேட்டால் உடனடியாக எப்படி கொடுக்க முடியும்? அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு புறம்பானது என்று ஆணையம் கூறியதை அதிமுக ஏற்றுக் கொள்கிறதா என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X