டாஸ்மாக் வருமானம் ரூ.2,500 கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: டாஸ்மாக் மதுக் கடைகள் மூலமான வருமானம் கடந்த ஆண்டை விட ரூ. 2,500 கோடி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2003 ஆண்டு நவம்பர் முதல் தமிழக அரசே நடத்தி வருகிறது.

இதன் மூலம் கடந்த 2004ம் ஆண்டு அரசுக்கு ரூ.4,872 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. தற்போது இது ரூ.12,491 கோடியாக அதிகரித்துள்ளது.

பார் ஏலம், காலி பாட்டில் விற்பனை, அட்டைகள் மூலம் ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. 2008-09ம் ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூலம் கலால், விற்பனை வரி ரூ.10,601.50 கோடி கிடைத்தள்ளது.

2009-2010ம் ஆண்டில் ரூ.12,401.53 கோடியும் கிடைத்துள்ளது. இதில் லாபம் ரூ.2,500 கோடியாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...