For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல்-கொய்தாவால் கடத்தப்பட்ட பிரான்ஸ் பணயக் கைதி படுகொலை

By Chakra
Google Oneindia Tamil News

பாரிஸ்: வட ஆப்பிரிக்க நாடானா மொரிடானியாவி்ல் அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பிரான்ஸ்சை சேர்ந்த மிகேல் ஜெர்மானியு படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி மிகேல் (78) நைஜர் நாட்டில் வைத்து அல்-கொய்தாவின் வட ஆப்பிரிக்கப் பிரிவான அல்-கொய்தா இஸ்லாமிக் மக்ரீப் அமைப்பால் கடத்தப்பட்டார்.

அந்த நாட்டில் சமூக நல அமைப்பின் இயக்குனராக இவர் பணியாற்றி வந்தார். இவரை விடுவிக்க வேண்டுமானால் பிரான்ஸ் சிறைகளில் உள்ள அல்-கொய்தா தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று இந்த அமைப்பு 15 நாள் கெடு விதித்தது.

இந் நிலையில் இவரை விடுவிக்க வந்த பிரான்ஸ் கமாண்டோ படையினர் மொரிடானியாவில் பஸ்கினோ பகுதியி்ல் அல்-கொய்தா ரகசிய முகாம் மாது தாக்குதல் நடத்தியதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே தீவிரவாத அமைப்பின கெடுவை பிரான்ஸ் ஏற்க மறுத்த நிலையில், ஜெர்மானியுவை கடந்த சனிக்கிழமை கொலை செய்துவிட்டதாக அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு நேற்று அல்-கொய்தா இஸ்லாமிக் மக்ரீப் அமைப்பு வீடியோ அனுப்பியுள்ளது.

மொரிடானியாவில் பிரான்ஸ் படையினரால் 6 அல்-கொய்தாவினர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவே இவர் கொல்ல்லப்பட்டதாக அல்-கொய்தா அறிவித்துள்ளது.

இராக் அல்-அரேபியா டிவி அலுவகம் மீது தாக்குதல்:

இந் நிலையில் பாக்தாதில் உள்ள செளதி அரசுக்குச் சொந்தமான அல்-அரேபியா தொலைக்காட்சி நிலையத்தின் மீது இன்று தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாயினர். 16 பேர் காயமடைந்தனர்.

பேருந்தி்ல் வெடிகுண்டுகளை நிரப்பி வந்து இந்த அலுவலகத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X