For Daily Alerts
Just In
சிறார் சீர்த்திருத்தப்பள்ளியிலிருந்து 18 சிறுவர்கள் தப்பியோட்டம்
சென்னை : சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து 18 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர்.
சென்னை புரசைவாக்கத்தில் சிறுவர்கள் சீர்த்திருத்தப்பள்ளி உள்ளது. பல்வேறு குற்றங்கள் செய்த 35 சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். 35 பேரில் இருந்து ஒரே நேரத்தில் 18 பேர் தப்பிச் சென்றுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் ஜன்னலை உடைத்து தப்பியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தால் சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தப்பியோடிய 18 சிறுவர்களையும் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 18 பேர் ஓட்டம் பிடித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.