For Daily Alerts
ஒரிஸ்ஸா சாலை விபத்தில் தமிழக டிஜிபி லத்திகா சரண் காயம்
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த சாலை விபததில் தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் காயமடைந்தார்.
அங்கு நடக்கும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க லத்திகா சென்றிருந்தார். அவருடன் மூத்த காவல்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
இன்று காலை அவர்கள் சென்ற கார் மீது இன்னொரு கார் மோதியதில் லத்திகாவுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.
சிறிய சிகிச்சைக்குப் பின் அவர் நலமுடன் உள்ளார். தான் நலமுடன் இருப்பதாக சென்னை காவல்துறை தலைமையகத்துக்கு அவர் தகவல் அனுப்பியுள்ளார்.
இன்று மாலை அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.