தூத்துக்குடி துறைமுகத்தில் கதிர்வீ்ச்சு பொருட்கள் இறக்குமதி: அதிகாரிகள் பறிமுதல்
தூத்துக்குடி: மாலத்தீவி்ல் இருந்து இரும்புக் கழிவுகள் என்ற பெயரில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட கதீர்வீச்சு தன்மை கொண்ட பேட்டரிகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தாமிரக் கம்பிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டைச் சேர்ந்த வாரி ஸ்டீல்ஸ் என்ற நிறுவனம் மாலத்தீவில் இருந்து இரும்புக் கழிவுகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்துள்ளது. இதற்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நிறுவனத்திற்காக வந்த கன்டெய்னரை சுங்க இலாகா சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் இரும்பு கழிவுகளுக்கு பதில் காலாவதியான காரீய அமில பேட்டரிகள் இருப்பதைக் கண்டனர். இவை அனைத்தும் அங்குள்ள வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு குப்பையில் வீசப்பட்டவை என விசாரணையில் தெரிய வந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இந்த காலாவதியான பேட்டரிகள் நச்சு மற்றும் கதீர்வீ்ச்சு தன்மை கொண்டவை என்பதும், சுற்றுச்சுழல் பாதிப்பை ஏற்படுத்துபவை என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த கன்டெய்னரின் ஒரு பகுதியில் இரும்பு கழிவுகளுக்கு மத்தியில் தாமிர ராடுகள் மற்றும் கம்பிகள் இருந்தன. இதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதி்ப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட 280 காலாவதியான நச்சு பேட்டரிகளை இறக்குமதி செய்த நிறுவனம் மூலமே மீண்டும் மாலத்தீவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துபாயி்ல் இருந்து இதுபோன்ற எலக்ட்ரானிக்ஸ் கழிவு பொருட்கள் மற்றும் கதிர்வீ்ச்சு தன்மை கொண்ட நிக்கல் கேட்மியம் பேட்டரிகள் வருவாய் புலனாய்வு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அவை மீண்டும் அந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.