For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுற்றுலாவை பெருக்க விபச்சாரம்-இலங்கை அரசின் பலே ஐடியா!

Google Oneindia Tamil News

Srilanka Tourism
கொழும்பு: இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விபச்சாரத்தை ஊக்குவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான செயல்திட்டங்களை வகுப்பதில் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் செயலகம் மும்முரமாக உள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போதைய நிலவரப்படி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக விபச்சாரத்தை சட்டப் பூர்வமாக்குவது கடினம் என்பதால் அதனை திரைமறைவில் அரசு ஆதரவுடன் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இப்போதைக்கு இணையத்தள ஆபாசப்படங்களில் நடித்தவர்கள் என்ற போர்வையில் தேடப்படும் பெண்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் அழகான யுவதிகள், வெளி மாவட்டங்களிலிருந்து கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக பிரதான நகரங்களை நாடி வருவோர் போன்ற பெண்கள் அரசாங்கத்தின் கவனத்துக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மற்றும் கணவனை இழந்த பெண்களையும் அதற்காக வலை வீசி மசிய வைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சூதாட்ட விஷயங்களை முன்னெடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவிடமும், விபச்சார நடவடிக்கைகளுக்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். இவர்களுக்கு உதவ ஒரு ராணுவக் குழுவும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X