For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரன்கோவிலில் கனகாம்பரம் விலை கிடு கிடு உயர்வு: கிலோ ரூ. 1000

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சுப மூகூர்த்த தினங்கள் மற்றும் வரத்து குறைவால் சங்கரன்கோவிலில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1000க்கு விற்பனையானது.

தென் மாவட்டங்களில் மதுரை, தோவாளைக்கு அடுத்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். சங்கரன்கோவிலைச் சுறறியுள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடி பிரதானமாக உள்ளது.

மல்லிகை, பிச்சி, கனகாம்பரம், சம்பங்கி, கேந்தி, அரளி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் விளைகின்ற பூக்கள் அனைத்தும் சங்கரநாராயண சாமி கோயிலில் அமைத்துள்ள மொத்த பூ மார்க்கெட் வியாபார கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

சமீபகாலமாக தொடர் முகூர்ந்த நாட்கள், முக்கிய விசேஷ தினங்களால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இவற்றின் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த மாதம் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ சம்பங்கி மற்றும் மல்லிகை ரூ.1000க்கு விற்பனையானது.

இன்று அதிக முகூர்த்தங்கள் இருப்பதால் பூ கமிஷன் கடையில் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம அதிகமாக காணப்பட்டது. பூக்களின் வரத்து குறைவாக இருந்து தேவை அதிகரித்ததால் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1000க்கு விற்பனையானது.

English summary
Owing to the wedding and festive season the price of kanakambaram went high. The decrease in production also contibutes to the hike in price. One kg kanakambaram costs Rs. 1000. People throng flower market inspite of the high cost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X