பாகிஸ்தானில் தாவூதின் 2வது மகள் திருமணம்: அமெரிக்கா வாழ் பாகிஸ்தானியரை மணந்தார்

தாவூதின் இரண்டாவது மகள் மஹ்ரீன் அமெரிக்கா வாழ் பாகிஸ்தானியரான அயூப் என்பவரை கடந்த 4-ம் தேதி மணந்து கொண்டார். தாவூதின் மாளிகையில் நடந்த இந்த திருமணத்தில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் சிலர், ஐஎஸ்ஐ அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
தாவூதின் மூத்த மகள் மஹ்ரூபை முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியான்தாதின் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் மியான்தாத் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் முதலில் மே மாதம் நடக்கவிருந்தது. ஆனால் அன்மையில் தாவூதிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதனால் முன்கூட்டியே நடத்தப்பட்டுள்ளது.
தாவூத் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் வாழ்வதாக மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 9/11 தாக்குதல்களுக்கு பிறகு தாவூத் பொய்யான பெயருடன் கராச்சியில் வசித்து வருகிறார். அமெரிக்காவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட தாவூத் தங்கள் நாட்டில் இருப்பதை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுக்கிறது.
கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் தான் 9/11 தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய தாக்குதல் ஆகும். இதில் முக்கிய குற்றவாளி தாவூத்.
மும்பை தாக்குதல்களுக்கு பிறகு தாவூத் தனது மனைவி, 4 மகள்கள், 1 மகன் உள்ளிட்ட குடுமபத்தாருடன் நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டார். அவரது மகள்களில் ஒருவர் பாகிஸ்தானில் மலேரியாவால் இறந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications