For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வில்லிவாக்கத்தில் போட்டியிட மனு தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பழகன்

Google Oneindia Tamil News

Anbalagan
சென்னை: வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட நிதியமைச்சர் க.அன்பழகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

இதையடுத்து பலரும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர். வழக்கமாக முதல் நாளில் சுயேச்சைகள்தான் அதிக அளவில் மனு தாக்கல் செய்வார்கள். ஆனால் இந்த முறை பிரசாரத்திற்கு நாட்கள் குறைவாக உள்ளதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் முதல் ஆளாய் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், நிதியமைச்சருமான க.அன்பழகன் இன்று காலை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி சம்பத்குமாரை சந்தித்து அவரிடம் தனது வேட்பு மனுவைக் கொடுத்தார்.

அதேபோல அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மகேஷ்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கருணாநிதி 24ம் தேதி மனு தாக்கல்

முதல்வர் கருணாநிதி வருகிற 24ம் தேதி திருவாரூரில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரசாரத்தைத் தொடங்கினார் ஸ்டாலின்:

இதற்கிடையே, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார். முதல் கட்டமாக திமுக நிர்வாகிகளை சந்தித்து அவர் தேர்தல் பணிகளை உற்சாகமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் தி.க. தலைவர் கி.வீரமணியையும் ஸ்டாலின் சந்தித்து ஆதரவு கோரினார்.

English summary
Minister Anbalagan has filed his nomination papers for villivakkam constituency today. Minister Pongalur Palanichamy also filed his papers for Coimbatore South. Saidapet DMK candidate Maheshkumar also filed nomination papers today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X