For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிசர்வ் வங்கி கணிப்பை மீறி எகிறியது பணவீக்கம்!!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: மார்ச் 31-ம் தேதிக்குள் பணவீக்கம் 7-8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், இப்போது கைமீறிப் போயுள்ளது பணவீக்கம்.

கடந்த பிப்ரவரியில் 8.31 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஒரு மாதத்தில் 8.99 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இது உணவுப் பணவீக்கம் அல்ல, மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கத்தைக் குறைப்பதற்காக பல்வேறு வட்டிவீதங்களைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி உயர்த்தி வந்த போதும், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுவதாகவே இப்போதைய நிலைமை உள்ளது.

உணவுப் பணவீக்கம் மட்டுமே ஓரளவு குறைந்து 8.28 சதவீதத்துக்கு வந்துள்ளது. ஆனாலும் உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்வடைந்துள்ளது.

English summary
General inflation surged beyond the 8 per cent fiscal year-end projection by the Reserve Bank of India (RBI) to 8.98 per cent in March from 8.31 per cent in February, driven mainly by rising prices of food items and manufactured goods
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X