For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சன்டிவி பங்குகள் விலை சரிவு!

By Shankar
Google Oneindia Tamil News

Sun TV Logo
சிபிஐ விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் சிக்கியுள்ள செய்திகள் வெளிவரத் துவங்கியதிலிருந்து சன் டிவியின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிய ஆரம்பித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் 516 ரூபாய் வரை விற்று வந்த சன் டிவியின் பங்குகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதியும் சிக்கிய செய்தி வெளியானதிலிருந்து கடும் சரிவு கண்டது. இன்றைய வர்த்தகத்தில் பங்கு ஒன்று ரூ 305 -க்கு கைமாறியது சன் டிவி பங்குகள். இன்று மட்டும் 2.7 சதவீதம் நஷ்டத்தை இவை ஏற்படுத்தின.

ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகள் ரூ 35-க்கு கைமாறின.

பங்குத் தரகர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு, இப்போதைக்கு சன் டிவி மற்றும் அதன் துணை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் பங்குகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்திவருகின்றனர்.

இதனால் இந்தப் பங்குகளை இப்போதே விற்றுவிடுவது நல்லது என்ற நினைப்பில், கையிலிருக்கும் பங்குகளை விற்று வருகின்றனர் முதலீட்டாளர்கள்.

ஆனால் தயாநிதி மாறன் விவகாரத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என சன் டிவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸில் 95 புள்ளிகள் சரிவு

இதற்கிடையே, இன்றைய பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் 95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. வர்த்தக நேர முடிவில் 18,373.43 புள்ளிகளில் குறியீட்டெண் நிலைபெற்றது.

நிப்டி 36.55 புள்ளிகள் சரிந்து 5,519.60 புள்ளிகளாக உள்ளது.

English summary
Shares in broadcaster Sun TV fell more than 2.7 percent on Wednesday after media reports said the founder's brother, textiles minister Dayanidhi Maran, was named in the 2G spectrum scam lawsuit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X