For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'செலவு இம்புட்டு தான்'.. ஜெ ரூ.9 லட்சம், கருணாநிதி ரூ.4.5!!!

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha and karunanidhi
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா, ரூ.9.5லட்சமும், திமுக தலைவர் கருணாநிதி ரூ.4.47 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்கு சமர்பித்துள்ளார்.

ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள கணக்கு விவரம்:

பொதுக் கூட்டங்களுக்காக-ரூ.20,650
துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பிரச்சார வீடியோ-ஆடியோ செலவு-ரூ.14,170
டிவி, ரேடியோ, பத்திரிக்கை விளம்பரம்-ரூ.58,300
வாகன செலவு-ரூ.65,700
அலங்காரங்கள் மற்றும் பேனர்கள்-ரூ.32,300

முன்னாள் முதல்வர் கருணாநிதி தேர்தலுக்காக ரூ.4,47,615 மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், இதில் வாகனங்களுக்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வெறும் ரூ 3.32 லட்சம் மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டதாகவும், இதில் பொதுக் கூட்டங்களுக்காக ரூ.66,700ம் கட்அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகளுக்காக வெறும் ரூ.980ம் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்காக ரூ.7.97 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ரூ.4.04 லட்சமும் செலவு செய்துள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தனக்கு தேர்தல் செலவுக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைமை ரூ.10 லட்சமும், அடையாறைச் சேர்ந்த ஒரு தனியார் கிரானைட் நிறுவனம் ரூ.5 லட்சமும் தந்ததாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.

விஜய்காந்த் தனது மொத்த செலவில் பாதியை 'இதர செலவுகள்' என்ற வகையில் கணக்குக் காட்டியுள்ளார்.

English summary
TN political party leaders have submitted their assembly elections expenditure to the Election Commission. Chief minister Jayalalithaa has shown her expense as Rs 9.5 lakh. Former chief minister M Karunanidhi claims to have spent only Rs 4,47,615 on his election. His son M K Stalin, who won from Kolathur constituency, seems to have been the most frugal, claiming to have spent just Rs 3.32 lakh on his campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X