For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் ஹஸாரே உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு

By Siva
Google Oneindia Tamil News

Anna Hazare
டெல்லி: நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

அன்னா ஹஸாரே நாளை முதல் 3 நாட்களுக்கு டெல்லியில் உள்ள ஜேபி நரேன் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கலாம், 5 ஆயிரம் பேருக்கு மேல் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது உள்பட 22 நிபந்தனைகள் விதித்து டெல்லி போலீஸ் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளித்தது.

ஆனால் அன்னா குழுவினர் 22-ல் 6 நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் போட்ட 22 நிபந்தனைகளை ஏற்க அன்னா குழுவினர் மற்றுத்துவிட்டனர். அதனால் தான் நாங்கள் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அன்னா குழுவினர் ஏற்க மறுத்த நிபந்தனைகள் வருமாறு,

3 நாட்கள் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். 5 ஆயிரம் பேருக்கு மேல் யாரும் உண்ணாவிரத இடத்தில் இருக்கக் கூடாது. அன்னா ஹஸாரேவை மருத்துவர்கள் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது. 50 பைக்குகள், 50 கார்களுக்கு மேல் வாகனங்களை நிறுத்தக் கூடாது. டென்ட் அடிக்கக் கூடாது.

தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க வந்தார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
Delhi police have denied permission for team Anna Hazare's fast as they have refused to accept the conditions putforth by the police. A senior police official has told that if team Anna enters JP Narain park tomorrow, action will be taken against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X