For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திஹார் சிறையில் சுதந்திர தின கொண்டாட்டம்-கனிமொழி, ராசா இனிப்பு சாப்பிட்டனர்

Google Oneindia Tamil News

Raja and Kanimozhi
டெல்லி: டெல்லி திஹார் சிறையில் இன்று நாட்டின் 65வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி, காமன்வெல்த் ஊழலில் சிக்கி கைதான சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

இதுகுறித்து சிறையின் செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா கூறுகையில், சிறையில் இன்று சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கல்மாடி, கனிமொழி, ராசா உள்பட அனைத்துக் கைதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகளும், வெளிநாட்டுக் கைதிகளும் கூட ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நன்னத்தையுடன் செயல்பட்ட சாதாரண குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதான 50 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 2000 கைதிகளின் தண்டனையும் குறைக்கப்பட்டது.

சிறையின் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமார் தேசியக் கொடியை ஏற்றி, கைதிகள், சிறை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மத்தியில் பேசினார்.

கைதிகளுக்கு இன்று சிறப்பு உணவும் இனிப்பும் வழங்கப்பட்டது. கலை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் கைதிகள் பங்கேற்றனர் என்றார்.

இருப்பினும் ராசா, கல்மாடி, கனிமொழி உள்ளிட்ட விஐபி கைதிகள் இந்த கலை, நடன நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

English summary
Former Commonwealth Games chief Suresh Kalmadi, DMK MP Kanimozhi and former communications minister A. Raja were among the thousands who celebrated Independence Day at the Tihar Jail Monday. "Kalmadi, Kanimozhi and Raja joined the celebrations with other inmates," said prison spokesperson Sunil Gupta. "Pakistani prisoners and other foreign nationals too celebrated the day." Special food was provided to all prisoners, who sang patriotic songs and performed dances to mark the occasion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X