முதல்வருக்கு குண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வருக்கு ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மிரட்டல் விடுத்த சென்னையை சேர்ந்த பெண்னை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமையகம் செயல்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் மாலை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய பெண், முதல்வர் ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் குண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு அது புரளி எனத் தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அழைப்பு வந்த இடத்தையும், மொபைல்போன் எண்ணையும் வைத்து விசாரி்த்தனர்.

இதில், அந்த மர்ம அழைப்பை விடுத்தவர், தாம்பரம் மறைமலைநகரை சேர்ந்த செந்தமிழ் செல்வி (32) எனத் தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், கணவரை பிரிந்த வாழும் செந்தமிழ் செல்வி, ஆசிரியர் பயிற்சி முடித்தவர் என்பதும், கணவரை பழிவாங்க அவரது பெயரில் உள்ள மொபைல்போனில் இருந்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் சிலர் கூறுகையில், குடும்பப் பிரச்சனையி்ல் தவித்த செந்தமிழ்செல்வி, கணவனை பழிவாங்கும் நோக்கில் 108 அலுவலகத்திற்கு பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A woman named Sentamil selvi, who made a Bomb treat to TN chief minister was arrested. She made a call to the head office of 108 ambulance and warned the police
Please Wait while comments are loading...