For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3000 புதிய பஸ்கள்... தமிழக அரசு அறிவிப்பு

By Shankar
Google Oneindia Tamil News

TN Govt Logo
சென்னை: இந்த நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கி இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து பேசும்போது அவர் இந்த அறிவிப்பினைச் செய்தார்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்பட்ட பஸ்களுக்குப் பதிலாக புதிய பஸ்கள் வாங்கப்படும்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 100, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 473, விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு 586, சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு 361, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு 593, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு 438, மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு 184, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு 265 ஆக மொத்தம் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கி இயக்கப்படும்.

இதற்காக ரூ. 434 கோடி செலவிடப்படும். தமிழக அரசின் பங்கு மூலதனமாக ரூ. 125 கோடியும், குறுகிய காலக் கடனாக ரூ. 137.50 கோடியும், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் கடனாக ரூ. 172.25 கோடியும் வழங்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்படும் 473 சொகுசுப் பேருந்துகள் வசதியான இருக்கைகளுடனும், கூடுதல் வசதிகளுடனும் வடிவமைக்கப்படும்," என்றார் அவர்.

English summary
Senthil Balaji, minister for state transport today announced that the govt has decided to purchase 3000 new buses in current financial year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X