For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

Google Oneindia Tamil News

Ponmudi
விழுப்புரம்: முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் ஜாமீன் மனுவை விழுப்புரம் செஷன்ஸ் கோர்ட் நிராகரித்து விட்டது.

தனக்குச் சொந்தமான சிகா அறக்கட்டளைக்காக கூட்டுறவு சங்கம் ஒன்றுக்குச் சொந்தமான பூங்கா உள்ளிட்ட நிலங்களை ஆக்கிரமித்தார் பொன்முடி என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஆகஸ்ட் 31ம் தேதி விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் பொன்முடி. கைது செய்யப்பட்ட அவர் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜாமீன் கோரி பொன்முடி தரப்பில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் பொன்முடி ஜாமீன் கோரி மனு செய்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த செஷன்ஸ் கோர்ட், மனுவை நிராகரித்து விட்டது. இதனால் பொன்முடி ஜாமீனில் வெளி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விரைவில் தாக்கல்செய்யப்படும் என பொன்முடி வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Villupuram district and sessions court has rejected the bail plea of former minister Ponmudi. Already magistrate court had rejected his bail plea. Now Ponmudi's lawyers have decided to move HC seeking bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X