சாக்கடலில் ஒட்டுத் துணியின்றி 1000 பேரை வைத்து ஒரு 'போட்டோ ஷூட்'!

Subscribe to Oneindia Tamil

Nude Photo shoot
நிர்வாண புகைப்படம் எடுப்பதில் பிரபலமான ஸ்பென்சர் ட்யூனிக் என்ற புகைப்படக் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேலின் சாக்கடலில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டுத் துணியில்லாமல் கடலில் இறங்கி போஸ் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இவர்கள் அத்தனை பேரும் இஸ்ரேலியர்கள் ஆவர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் 18 வயது முதல் 77 வயது வரையிலான ஆண், பெண்கள் கலந்து கொண்டு ட்யூனிக்குக்கு போஸ் கொடுத்தனர்.

நீரில் மிதந்தபடியும், நீருக்குள் நின்றபடி கைகளை மேலே உயர்த்தியபடியும், விதம் விதமாக இவர்கள் போஸ் கொடுத்தனர்.

ட்யூனிக் வேண்டுகோளை ஏற்று இவர்கள் அதிகாலை 1 மணிக்கே கடலுக்கு அருகே வந்து கூடி விட்டனர். பின்னர் உடைகளைக் களைந்த அவர்கள் கடலில் இறங்கி போஸ் கொடுக்கத் தயாரானார்கள். ட்யூனிக் சூரிய உதயம் ஆரம்பமானவுடன் கடலில் இறங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனால் அனைவரும் சூரியனின் வருகைக்காக காத்திருந்தனர்.

சூரிய உதயம் தொடங்கியதும் அத்தனை பேரையும் கடலில் இறங்கி மிதக்குமாறு கூறினார் ட்யூனிக். அதன்படி அனைவரும் கடலில் மிதந்தனர். அதை புகைப்படம் எடுத்துத் தள்ளினார் ட்யூனிக்.

அடுத்து ஒரு தீவு போன்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்துப் படம் பிடித்தார் ட்யூனிக்.

படப்பிடிப்பு நடைபெறும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மதவாதிகள் பிரச்சினை செய்யலாம் என்பதால் இந்த ஏற்பாடு.

ட்யூனிக்கே ஒரு யூத அமெரிக்கர்தான். இவர் மனிதர்களை நிர்வாண கோலத்தில் பல வித்தியாசமான போஸ்களில் புகைப்படம் எடுக்கும் கலைஞர் ஆவர்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஹாலந்து மற்றும் ஆஸ்திரியாவிலும் இதுபோன்ற நிர்வாண புகைப்படங்களை எடுத்துள்ளார் ட்யூனிக். 1992ல் இருந்து இந்த வேலையில் இவர் ஈடுபட்டு வருகிறார். புகைப்படமாக மட்டுமல்லாமல் வீடியோவையும் அவர் உருவாக்கி வருகிறார்.

இவர் எடுத்த மிகப் பெரிய நிர்வாண புகைப்பட போஸ் நிகழ்ச்சி 2007ல் மெக்கிசோ சிட்டியில் நடந்தது. அதில் 18,000 பேர் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+