உலகின் குள்ளமான பெண்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அமெரிக்க கல்லூரி மாணவி

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரிட்ஜெட் ஜார்டன் (22). அவரது சகோதரர் பிராட் ஜார்டன் (20). பிரிட்ஜெட்டின் உயரம் 27 இன்ச், பிராடின் உயரம் 38 இன்ச். அவர்கள் தான் உலகிலேயே மிகவும் குள்ளமான உடன்பிறப்புகள் என்று கின்னஸ் சாதனை குழு தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்ஸில் உள்ள கஸ்கஸியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நாட்டியம், சியர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்கு. பிராட் கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, மேஜிக் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்.
பிரிட்ஜெட் தான் உலகிலேயே குள்ளமான பெண்மணி என்று கின்னஸ் உலக சாதனைக் குழு தெரிவித்துள்ளது. 28.5 இன்ச் உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன் தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமானப் பெண்மணியாக திகழ்ந்தார்.
இதுவரை வாழ்ந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்ட்ர்ஸ் தான். அவர் உயரம் வெறும் 24 இன்ச். அவர் கடந்த 1895-ம் ஆண்டில் தனது 19 வயதில் நிமோனியாவால் உயிர் இழந்தார்.
பிரி்ட்ஜெட் நீண்ட நாட்களுக்கு உலகின் குள்ளமானப் பெண்ணாக இருக்க முடியாது. ஏனென்றால் 2 அடி உயரமுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஜோதி அம்ஜி வரும் டிசம்பர் மாதம் 18 வயதை அடைகிறார். எனவே, விரைவில் ஜோதி தான் உலகின் குள்ளமானப் பெண் என்று அறிவிக்கப்படுவார் என்று கின்னஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications