For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று தேவர் ஜெயந்தி விழா துவக்கம்: தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு

By Siva
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா மற்றும் 49வது குருபூஜை விழா இன்று துவங்குகிறது. இந்த விழா வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா மற்றும் 49வது குரு பூஜை இன்று துவங்குகிறது. இந்த விழா வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கிறது. இதையொட்டி பசும்பொன் மற்றும் கமுதியில் பாதுகாப்பு பணியில் 6000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பசும்பொன்னுக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. வாகனங்களின் கூரைகளில் அமர்ந்து பயணம் செய்யவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க 12 எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 43 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைகள், 17 அம்பேத்கர் சிலைகள், 5 இம்மானுவேல் சேகரன் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாநகரில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Thevar Jayanthi festival starts today in Pasumpon. Thevar Guru Pooja will be celebrated on october 30. More than 6000 police are engaged in security measures. Police officials wants to conduct Thevar Jayanthi in a peaceful manner unlike Immanuel Sekaran memorial day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X