For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறைக்குள் செல்போனை நிமிடத்திற்கு ரூ.25க்கு வாடகைக்கு விட்ட கைதிகள்-2 செல்போன்கள் பறிமுதல்

By Siva
Google Oneindia Tamil News

கோவை: கோவை மத்தி்ய சிறைக்குள் நிமிடத்திற்கு ரூ. 25க்கு வாடகைக்கு விடப்பட்ட செல்போன்கள் மற்றும் ரூ. 11,000 ரொக்கத்தை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை மத்திய சிறையில் சுமார் 2250 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் செல்போன் புழக்கம் அதிகம் உள்ளது என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதை தடுக்க சிறை நிர்வாகம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் 30 செல்போன்கள் சிக்கின. அவை கேமரா மற்றும் எம்பி3 வசதியுடன் கூடிய செல்போன்கள். இந்நிலையில் கைதிகள் 2 பேர் நிமிடத்திற்கு ரூ. 25க்கு செல்போனை சக கைதிகளுக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதாக சிறை நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து தலைமை வார்டன் பிச்சுமணி மற்றும் சிறை காவலர்கள் கோவை பெரியநாய்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில்(29), செந்தில்குமார்(31) என்ற 2 பேர் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது 2 செல்போன்களும், ரூ. 11,000 ரொக்கமும் சிக்கியது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் செல்போன்களை நிமிடத்திற்கு ரூ.25க்கு வாடகைக்கு விட்டது உறுதிபடுத்தப்பட்டது.

English summary
Coimbatore central prison authorities have confiscated 2 cellphones and Rs. 11,000 cash from 2 inmates. Those 2 used to rent the cellphones for Rs. 25 per minute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X