For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி- துவாரகை விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியை அடைந்தது

Google Oneindia Tamil News

மதுரை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி - துவாரகை இடையிலான விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் துவாரகையிலிருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கி நேற்று தூத்துக்குடியை வந்தடைந்தது.

துவாரகையில் கடந்த சனிக்கிழமை பகல் 10 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் நேற்று பகல் ஒரு மணிக்கு மதுரையை வந்தடைந்தது. மதுரையில் இருந்து பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைந்தது.

மதுரை - துவாரகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 09567) இன்று (15ம் தேதி) மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு வரும் 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு துவாரகை சென்றடையும். இந்த ரயிலில் 1 ஏ.சி - 2 டயர், 2 ஏ.சி - 3 டயர், 7 சிலீப்பர் வகுப்புகள், 6 பொது 2ம் வகுப்பு மற்றும் 2 சரக்கு பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த ரயில் ஜாம்நகர், ராஜ்கோட், ஆமதாபாத், வடோதரா, பரூச், சூரத், வல்சாத், வாபி, வாகை ரோடு, கல்யாண், லோனவாலா, புனே, சோலாப்பூர், குல்பர்க்கா, வாடி, ரெய்ச்சூர், மந்த்ராலயம் ரோடு, குண்டக்கல், தர்மாவரம், ஹிந்தப்பூர், எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

English summary
Southern Railway has introduced a new vivek express from Tuticorin to Dwarka. The first train reached Tuticorin yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X