உலகத் தலைவர்கள் முத்தமிட்டுக் கொள்வது போல விளம்பரம்- சிக்கலில் பெனட்டன்
UNHATE என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த விளம்பரம் பெரும் அதிருப்தி அலைகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் ஒருவருக்கொருவர் உதட்டு முத்தம் கொடுத்துக் கொள்வது போல இதில் மார்பிங் செய்து காட்சிகளை வைத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜின்டாவுடன் முத்தமிடுவது போலவும், வெனிசூலா அதிபர் ஹியூகோ சவேஸுடன் முத்தமிடுவது போலவும் காட்சிகள் உள்ளன.
மேலும் பிரெஞ்சு அதிபர் சர்கோஸியும், ஜெர்மன் பெண் சான்சலர் ஏஞ்செலா மார்கெலும் கூட முத்தமிடுவது போல விளம்பரம் செய்ததுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. இருவரும் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிடுவது போல இந்த மார்பிங் படம் உள்ளது.
விரோதத்தை வெறுப்போம், நட்புணர்வை வளர்ப்போம் என்ற அர்த்தத்தில்தான் இந்த விளம்பரத்தை மேற்கொண்டதாக பெனட்டன் கூறினாலும் கூட, அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் போப்பாண்டவர் 14ம் பெனடிக்ட்டும், எகிப்து அதிபர் அகமது அல் தயபும் முத்தமிடுவது போன்ற காட்சியையும் இந்த நிறுவனம் வைத்திருந்தது. ஆனால் வாட்டிகனிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதை மட்டும் கட் செய்து விட்டது பெனட்டன்.
விரோதத்தை வெறுப்போம் என்ற பெயரில் வெளியான விளம்பரம் இப்போது உலகம் முழுவதும் வெறுப்பை வளர்த்திருப்பதை பெனட்டன் எதிர்பார்த்திருக்குமா என்பது தெரியவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications