For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'டேம் 999'... மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வலியுறுத்தும் டேம் 999 படத்தை எக்காரணம் கொண்டும் இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று ராஜ்ய சபையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது திமுக.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும் விலைவாசி உயர்வு, கறுப்பு பண விவகாரம், ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னை முதலியவை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரினர்.

அப்போது, முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டதாக கூறப்படும் 'டேம் 999' படத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழர்களின் உணர்வோடு விளையாடும் இந்தப் படத்தை அனுமதித்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். எனவே இந்தப் படத்துக்கு மத்திய அரசே தடை விதிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் கூறினர்.

இதனால் அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நீடித்ததால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

English summary
The DMK MP's in the upper house of parliament today raised the issue of Dam999 release. They urged the union govt to ban the movie's release all over India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X