சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம்: 9வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து நாடாளுமன்றம் முடங்கிப்போயுள்ளது. 2ஜி ஊழல், கருப்புப் பண விவகாரம், தெலுங்கானா விவகாரம், தற்போது சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம் ஆகியவற்றால் நாடாளுமன்றம் இன்றுடன் சேர்த்து 9 நாட்களாக முடங்கியுள்ளது.
இன்று நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. லோக் சபா கூடியவுடன் சபாநாயகர் மீரா குமார் கேள்வி நேரத்தை துவங்கினார். உடனே மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாசுதேப் ஆச்சாரியா எழுந்து சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அவருடன் பாஜகவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியும் சேர்ந்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று முரளி மனோகர் ஜோஷி நோட்டீஸ் கொடுத்தார். இதையடுத்து பாஜக மற்றும் இடதுசாரிகள் அமளியில் ஈடுபட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் கூச்சலிட்டனர்.
இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உரிய தீர்வு காணக் கோரி வாசகங்கள் அடங்கிய அட்டைகளை உயர்த்திக் காட்டினர். உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் லோக் சபா வரும் 7ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல அதிமுக எம்.பிக்களும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை எழுப்பி கோஷமிட்டனர்.
இதே போன்று ராஜ்யசபாவிலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்று வலியுறுத்தி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அந்த அவையும் வரும் 7ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications