For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் காங்.-பாஜக எம்.பி.க்கள் மோதல்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஆதார் திட்டம் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டத்தில் பாஜக எம்பி அலுவாலியா காங்கிரஸ் எம்.பி. ராஷித் அல்வியைப் பிடித்து தள்ளிவிட்டுள்ளார்.

இன்று மாலை டெல்லியில் ஆதார் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாடாளுமன்ற நிலைக்குழு கூடியது. அப்போது ஆதார் திட்டம் குறித்த அறிக்கைகளை பாஜக எம்பி அலுவாலியா லீக் செய்ததாக காங்கிரஸ் எம்.பி. ராஷித் அல்வி குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அலுவாலியா அல்வியைப் பிடித்து தள்ளினார். இதையடுத்து இருவருக்கும் இடையே தள்ளு, முள்ளாகிவிட்டது.

நாடாளுமன்றத்தில் இதுபோன்ற அவலங்கள் பல முறை நடந்துள்ளாலும், நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் இரு எம்.பி.க்கள் சண்டை போட்டுள்ளது இது தான் முதன் முறையாகும்.

நாட்டின் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த மூத்த எம்.பி.க்கள் இப்படி சிறுபிள்ளைத் தனமாக நடந்துள்ளது அனைவரையும் தலைகுனியச் செய்துள்ளது.

English summary
BJP MP Ahluwalia has pushed congress MP Rashid Alvi during the meeting of parliamentary standing committee on UID. This is the first such thing has happened in a parliamentary committee meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X