For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியன் வங்கியின் வர்த்தகம் ரூ.2.25 லட்சம் கோடியாக உயரும்-வங்கித் தலைவர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெல்லை இந்தியன் வங்கியின் மொத்த வாணிபம் வரும் 2012 மார்ச் மாதத்திற்குள் 2.25 லட்சம் கோடியாக உயரும் என்று இந்தியன்வங்கித் தலைவர் பசீன் தெரிவித்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் பாளை பெருமாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியின் தலைவர் பசின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிம் பேசியதாவது :

இந்தியன் வங்கியின் நெல்லை மண்டலம் மூலம் 3300 கோடி வணிபம் செய்யப்படுகிறது. மார்ச் 2012க்குள் வங்கியின் மொத்த வணிபம் ரூ.4 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படுவதுடன் 55 கிளைகள், 50 ஏடிஎம்கள் என்ற நிலை எட்டப்படும்.

ஆன்லைனில் கல்விக்கடன்

2012 மார்ச் மாதத்திற்குள் மொத்த வணிபம் 2.25 லட்சம் கோடியாக உயர்த்தப்படுவதுடன் 2 ஆயிரம் கிளைகள், 1400 ஏடிஎம்கள் என்ற நிலை உருவாக்கப்படும். இந்தியன் வங்கியின் மூலம் இதுவரை 3300 கோடியும். நடப்பு ஆண்டில் 600 கோடியும் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லாபகரமான வங்கியாக இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. வங்கி சேவை முழுவதும் ஆன் லைன் மயமாக்கப்பட்டுள்ளதால் கல்வி கடன், வீட்டு கடன் கேட்டு ஆன் லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். சிறுதொழில் கடனுக்கும் விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தியன் வங்கி பணிக்கு புதிதாக 1500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1000 பேர் அலுவலர்கள், 500 பேர் எழுத்தர்கள். 2012 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Indian Bank Chairman and Managing Director T M Bhasin opened new building in regional office at Palayamkottai on Monday. He met media person, Indian Bank earn 2.25 Lakh Crore to 2012 March.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X