For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவப் பொறியாளர்களை வைத்து அணையை ஆராய அச்சுதானந்தன் கோரிக்கை-கோர்ட்டில் வழக்கு

Google Oneindia Tamil News

Achuthananthan
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையை ராணுவப் பொறியாளர்களை வைத்து ஆராய வேண்டு்ம். முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முல்லைப் பெரியாறு அணையினால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்திய ராணுவத்தின் பொறியாளர்களை அழைக்க வேண்டும். மிகக் குறைந்த காலத்தில், பேரழிவை வெற்றிகரமாக தடுத்து திருப்பிவிடுவதில் அவர்கள் மட்டுமே வல்லுநர்களாக உள்ளனர்.

அரசு செயல்படுவதில் தாமதம் காட்டினால், லட்சக்கணக்கான மக்கள் பேரழிவு அபாயத்துக்குள் தள்ளப்படுவார்கள். சாதாரண குடிமகனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியக் கடமை அரசுக்கும், நீதித்துறைக்கும் உள்ளது. பொதுமக்கள் நம்பிக்கை கோட்பாட்டின்படி, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

116 ஆண்டுகால அணை உடையும்பட்சத்தில், லட்சக்கணக்கான மக்களைக் பாதுகாக்க போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

English summary
Former Kerala CM and opposition leader Achuthananthan has sought to call Army engineers to inspect the Mullaiperiyar dam immediately. He has filed a PIL in the Highcourt of Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X