For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு நாடாளுமன்றத்தில் தீர்வுகாணக் கோரி தமிழக காங். எம்பிக்கள் போராட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு சுமூக தீர்வு காண வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம்–கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அணை பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். ஆரூண், மாணிக் தாகூர், விஸ்வநாதன், கிருஷ்ணசாமி, ராமசுப்பு உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்காமல் மத்திய அரசு சுமூக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

English summary
TN Congress MPs protest in Parliament premises seeking centre to solve the Mullaiperiyar issue peacefully. They want the centre not to make politics out of this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X