For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மிகக் கடும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை 52 ரூபாய் 84 காசு என்ற அளவைத் தொட்ட ரூபாயின் மதிப்பு, செவ்வாய்க்கிழமை 53 ரூபாய் 74 காசு அளவுக்குக் குறைந்தது.

இந் நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரை வாங்குவதில் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் கடும் போட்டி நிலவுவதால், டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவகிறது.

இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்திலேயே இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா குறைந்துவிட்டது. அதாவது ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.54.17 என்ற அளவை எட்டிவிட்டது.

இது வரலாறு காணாத சரிவாகும்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில், ஆசிய நாடுகளின் கரன்சிகளிலேயே இந்திய ரூபாயின் மதிப்பில்தான் மிக அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. இப்போது அதைவிட கீழ்மட்ட அளவை எட்டியுள்ளது இந்திய ரூபாய்.

மேலும் விவரங்களுக்கு: 1973ம் ஆண்டை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு

English summary
The Indian rupee fell by 46 paise to a record low of Rs 54.17 per US dollar in early trade on Thursday, breaching the Rs 54 per dollar-mark for the first time in history on sustained foreign capital outflows and dollar gains against the euro and other rivals overseas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X