For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை மாவட்டத்தில் நிரம்பி வழியும் 8 அணைகள்- விவசாயப் பணிகள் தீவிரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் 8 அணைகள் நிரப்பி முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இந்த சரியான அளவு பெய்துள்ளதால் இம்மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும் தங்கள் பாசன தேவைக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளையே நம்பியுள்ளனர். பாபநாசம் அணையின் மூலம் இரு மாவட்டங்களிலும் உள்ள 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறி்ச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி, கடையம், சுத்தமல்லி, நெல்லை, பாளையங்கோட்டை, குறிச்சி, மேலப்பாளையம், செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 75 சதவீதம் அதிகமான இடங்களில் நெல் நடவு பணிகள் தீவிரமடைந்து விட்டன.

நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு 66 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Of the 11 reservoirs in the district, eight dams, including Papanasam and Servalar, reached their full capacity since Wednesday night even as the level in the remaining reservoirs is steadily increasing, thanks to drizzle in the catchment areas of the Western Ghats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X