இந்தியர்கள் எதிர்ப்பு: லண்டன் மைதானத்தில் இருந்து சின்னங்களை அகற்றுகிறது டவ் கெமிக்கல்ஸ்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் எதிர்ப்பு காரணமாக லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இருந்து, தனது வர்த்தக சின்னத்தை நீக்குவதற்கு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

போபாலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப் ஆக உள்ளது. இதற்கான அந்த நிறுவனத்தின் வர்த்தக சின்னங்கள் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்கு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சின்னங்களை மைதானத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்திருந்தார்.

சின்னங்களை அகற்ற ஒப்புதல்

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இருந்து, தனது வர்த்தக சின்னத்தை நீக்குவதற்கு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக

பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, வர்த்தக சின்னத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் வி.கே மல்ஹோத்ரா, ஒலிம்பிக் போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்தும், அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+