For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடையநல்லுரில் மர்ம காய்ச்சல்-50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

கடையநல்லூர்: கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடையநல்லூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டாராப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். நோய் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் அவர்கள் அனைவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனை மற்றும் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலுக்கு கால்வாய் காரணமா?

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடையநல்லூர் பகுதியில் இதே போன்று என்ன காய்ச்சல் என தெரியாமலேயே 35க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் இதுகுறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வக்கீல் முகைதீன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கிலா கோர்ட் நகரின் மையப்பகுதியில் வழிந்தோடும் பாப்பான்கால்வயை சுத்தப்படுத்தவும், தென்காசி மாவட்ட மருத்துவ்மனையில் ரத்த வங்கி அமைக்கவும் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பாப்பான்கால்வாய் சுத்தம் செய்யப்பட்டாலும் ரத்த வங்கி கட்டமைப்பு மட்டும் அமைக்கப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த மர்ம காய்ச்சல் இப்பகுதியில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Panic gripped people in Kadayanallur area as 50 persons have succumbed to an unknown viral fever during the past 15 days. Places like Melapalayam and Kadayanallur in the district were the worst affected and a member from almost each family was suffering from this unknown fever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X