For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு விவகாரம்: மத்திய அரசு கேரள அரசுக்கு துணைபோகிறது: கி.விரமணி

Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு கேரள அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று திக தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசு மறைமுகமாக கேரள அரசின் போக்குக்கு இணங்கி செயல்படுகின்றது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதை மெய்பிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் ஒரு தற்காலிகப் பாதுகாப்புக் குழுவை உருவாக்கும் பொறுப்பைப் ஒப்படைத்திருப்பது நியாயமான செயல் அல்ல. அது தேவையானதும் அல்ல. இது கண்டனத்திற்குரிய செயலாகும்.

உடனே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அந்தக் குழு நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய ரிசர்வ் படையை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Dravidar Kazhagam leader K. Veeramani has accused centre of taking sides with Kerala government in Mullai Periyar row. He wants CRPF to protect the controversial dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X