For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெல்லை: அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த வீ ஆர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள் 14 நடமாடும் மருத்துவ பிரிவுகள், 7 பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் 7 தொழுநோய் மருத்துமனைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த மருத்துவமனைகளின் சேவையை நம்பியே உள்ளனர்.

அரசு டாக்டர்கள், அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் மக்களுக்கு முழு சேவை அளிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்துகின்றனர்.தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரிகின்றனர்.

அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதிலும், தனியாக கிளினிக் நடத்துவதிலும் அதிக லாபம் கிடைப்பதால் அரசு டாக்டர்கள் பணியில் அலட்சியம் காட்டுகின்றனர்.

கவனக்குறைவால் மரணம்

அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான டாக்டர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. அந்த நேரத்தில் சொந்த மருத்துமனையில் உள்ளனர். கடந்த 6 மாதங்களில் அரசு டாக்டர்களின் கவனக்குறைவால் 70 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துமனைக்கு செல்ல கூடாது என்ற உயிர் பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் போலீசார், ஆசிரியர்கள் தனியாக தொழில் நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை உள்ளது. அதே போல் தமிழ்நாட்டிலும் அரசு டாக்டர்கள், தனியாக கிளினிக் நடத்தவும், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தூத்துக்குடியில் அரசு மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக்கில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆபரேசன் செய்யும் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த மருத்துவரை கர்ப்பிணிப் பெண்ணின் கணவரே கொலை செய்தார். இந்த நிலையில் இந்த நிலையில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A Public Interest Litigation seeking to ban private practice by government doctors (all cadres) in Tamil Nadu was filed at the Madras High Court Bench here today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X