தானே புயல்: ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க தேமுதிக எம்எல்ஏக்கள் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தானே புயல் நிவாரண நிதிக்கு, தேமுதிக எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

சமீபத்தில் தானே புயலால் கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு பேரிழப்புக்கு ஆளாகியுள்ளனர். சேத விவரங்களை முறையாக கணக்கிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும்.

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை தானே புயல் நிவாரண நிதியாக அளிக்க முடிவு செய்துள்ளனர். இதன் மொத்த தொகையாக ரூ.15 லட்சம் நிதி தமிழக முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK chief Vijayakanth has said that, The party MLA's will give their one month salary for the cyclone relief fund. Central and state governments should calculate the damages and should give proper relief fund.
Please Wait while comments are loading...