For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுஷ்மாவும் ஜெட்லியும்கூட பிரதமராகலாமே.. மாத்தி பேசும் கத்காரி!

Google Oneindia Tamil News

Nitin Gadkari
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் அத்வானி மற்றும் நரேந்திர மோடி மட்டுமல்லாது சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதாக அக்கட்சித் தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், மற்ற அரசியல் கட்சிகளைப் போல குடும்ப அரசியலை பாஜக மேற்கொள்ளாது என்றும் கூட்டு முடிவே பாஜகவின் நிலைப்பாடு என்றும் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகவும் கட்கரி சாடியுள்ளார்.

சமீபத்தில்தான் இவர் நான் பிரதமர் பதவிக்குப் போட்டியிட முடியாது. ஆனால் நரேந்திர மோடிதான் எல்லா வகையிலும் சிறப்பானவர் என்று கூறி மோடிக்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு கட்சிக்குள் கசமுசாவாகியிருக்கும் போல, இதனால் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் கூட தகுதியானவர்களே என்று பேசியுள்ளார்.

மேலும், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள உத்திரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் பாஜக மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ராதான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருபோதும் தாம் தெரிவிக்கவில்லை என்றும் கத்காரி மறுத்துள்ளார். அதே நேரத்தில் வெளி மாநிலத்தவரான உமாபாரதியை ஏற்கக் கூடாது என்ற காங்கிரஸின் பிரச்சாரத்துக்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் கத்காரி கூற வருவது என்ன என்பது மட்டும் தெளிவாகப் புரியவில்லை...

English summary
It’s not a fight between BJP parliamentary party chairman L.K. Advani and Gujarat chief minister Narendra Modi over the BJP’s PM slot anymore. BJP chief Nitin Gadkari has also put senior leaders Arun Jaitley and Sushma Swaraj in the race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X