For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் விலை: உயர்ந்தது ரூ 712; குறைந்தது ரூ 264!

By Shankar
Google Oneindia Tamil News

Gold
சென்னை: நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ 712 உயர்ந்த தங்கத்தின் விலை, நேற்று ரூ 264 குறைந்தது.

தங்கத்தின் விலை ஒரு நாள் தாறுமாறாக உயர்ந்தால், இன்னொரு நாள் அதில் கால் பங்கு கூட குறைவதில்லை. இதனால்தான் தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 568-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.712 அதிகரித்து, ரூ.21 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் தங்கத்தின் விலையில் நேற்றும் மாற்றம் காணப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 16-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 264 குறைந்து உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,627-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து நிலையற்ற தன்மை காணப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக தங்கத்தின் விலையில் இனி வரும் காலங்களில் ஏற்றம் மட்டுமே இருக்கும் என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

English summary
Gold rate declined Rs 267 per sovereign on Saturday. The current selling price of 22 ct gold is Rs 21016 per sovereign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X