For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கைது செய்ய நடவடிக்கை: நெல்லை கூடுதல் எஸ்பி

By Shankar
Google Oneindia Tamil News

கூடங்குளம்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கூடுதல் எஸ்பி தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உதயகுமார், அவருடன் தொடர்புடைய பாதிரியார்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலை மிரட்டல், தேசவிரோத செயல் உட்பட அனைத்து சட்டபிரிவுகளிலும் கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என்பது குறித்து காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி மற்றும் கூடங்குளம் அணு உலை ஆதரவு அமைப்பின் மக்கள் இயக்க தலைவர் சத்தியசீலன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நெல்லை மாவட்ட போலீசாரிடம் விபரம் கேட்டிருந்தார்.

இதற்கு நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை கூடுதல் எஸ்பி அனுப்பியுள்ள பதில் வருமாறு,

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதுள்ள வழக்குகளில் அவர்கள் முன்ஜாமீன் எதுவும் வாங்கவில்லை. அவர்களை கைது செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகிவிடும் என்பதால் கைது செய்யவில்லை. தற்போது வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் அனைவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Under RTI act pro Kudankulam team head Sathyaseelan has asked the Tirunelveli police as to why they haven't taken any action against nuclear power project protesters. For this Tirunelveli district additional SP has replied that police are taking actions to arrest the protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X