For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு வீட்டில் போலீஸ் ரெய்டு

Google Oneindia Tamil News

Thangam Tennarasu
அருப்புக்கோட்டை: முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டவர் தங்கம் தென்னரசு. தனது சீரிய செயல்பாடுகளால் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பாராட்டு பெற்றவர். முக.அழகிரி ஆதரவாளராக இருந்தாலும், ஸ்டாலின் தரப்பிடமும் நட்பு பாராட்டி வருபவர்.

இந்த நிலையில் தங்கம் தென்னரசு வீடு லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் சோதனைக்குள்ளாகியுள்ளது. அருப்புக்கோட்டை மல்லாங்கிணறு பகுதியில் உள்ள தங்கம் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காலைமுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீடு மற்றும், நரிக்குடி, காரியாபட்டி உள்ளிட்ட தங்கம் தென்னரசுவின் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தங்கம் தென்னரசுவின் உதவியாளரின் மதுரை வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் என்ன சிக்கியது என்பது தெரியவில்லை. சோதனையைத் தொடர்ந்து தங்கம் தென்னரசுவின் வீட்டில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

ஏற்கனவே பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்கள், தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குகளும் பதிவாகியுள்ளன. தற்போது அந்த வரிசையில் தென்னரசும் இணைகிறார்.

தங்கம் தென்னரசு, புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சுழி தொகுதியிலிருந்து திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DVAC sleuths are conducting surprise raids in Thangam Tennarasu's houses in Aruppukottai and Chennai from this morning. Tennarasu was the school education minister in last DMK regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X