அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் தொடங்கியது ஈரான் -அதி்ர்ச்சியில் அமெரிக்கா
டெக்ரான் (ஈரான்): அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் தான் அமைத்துள்ள அணு உலையில், எரிபொருளை நிரப்பும் பணியை நேற்று தடபுடலாக தொடங்கியது. இதனால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஈரான் தலைநகர் டெக்ரானின் வட பகுதியில் உருவாக்கப்பட்ட அணுசக்தி நிலையத்தில் உள்ள அணுஉலையில் எரிபொருளை நிரப்பும் பணியை ஈரான் அதிபர் மகமூத் அகமதினேஜாத் நேற்று தொடங்கி வைத்த காட்சியை அந்நாட்டு தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியது..
நிகழ்ச்சியில் ஈரான் அதிபர் பேசுகையில்,
ஈரான் அணுசக்தி தொழில்நுட்பத்தை பெறுவதை மேற்கு நாடுகள் தடுக்க முயல்கின்றன. இந்த அணுசக்தி நிலையம் மூலமாக ஈரான் அணுகுண்டு எதையும் தயாரிக்கப்போவதில்லை. ஈரான் அணுசக்தி தொழில்நுட்பத்தை பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் அவர்.
அணு ஆயுதங்களை உருவாக்க தேவையானது யுரேனியம் எரிபொருள். இதனை தூய்மைப்படுத்தவும் குறைந்த சேதாரத்தில், மிக விரைவாக உருவாக்கவும் சூப்பர்சோனிக் வேகத்திலான நான்காம் தலைமுறை சென்ட்ரிபிஜஸ் எனப்படும் பிரிப்பானை உருவாக்கி இருக்கிறது ஈரான்.
ஈரானில் மேலும் புதிதாக நான்கு அணு ஆராய்ச்சி நிலையங்களையும் அந்நாட்டு அதிபர் வழங்கியுள்ளார்.
ஈரானின் அணுஆயுத நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் அண்மையில் இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை ஈரான் மீது தடை விதித்திருந்த நிலையில் இத்தகைய அதிரடி அரங்கேற்றியிருக்கிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானின் அணுசக்தி வல்லமை பிரகடனத்தை நிராகரித்துள்ளன.
ஈரான் மீது போர் தொடுத்தாக வேண்டும் என்று இஸ்ரேல் கொக்கரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் மத்திய கிழக்கு கடற்பரப்புக்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
குறிவைத்து அடித்த ஈரான்.. பற்றி எரியும் இஸ்ரேல் கப்பல்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய பிரச்சனை! -
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications