For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரன்கோவில்-திமுக உள்பட அத்தனை வேட்பாளர்களுக்கும் டெபாசிட் காலி

Google Oneindia Tamil News

Mutukumar, Jawahar Suriyakumar and Sathan Thirumalaikumar
சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர். திமுகவும் டெபாசிட்டைப் பறி கொடுத்திருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்று முன்பு முடிவடைந்தது. இதில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமாரை 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் வெற்றி பெற்றார்.

முத்துச் செல்வியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர். திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் வெறும் 26,220 வாக்குகளையே பெற்றார். மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 20,678 வாக்குகள், தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் 12,144 வாக்குகள், பாஜக வேட்பாளர் முருகன் 1633 வாக்குகள் பெற்றனர். இதனால் இவர்கள் அனைவரும் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.

English summary
Except ADMK, all other candidates are set to lose their deposit in Sankarankovil by election. DMK is loosing its ground in the constituency with a severe setback.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X