For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய அதிகாரியை விடுவிக்க கோரி நாமக்கலில் சாலை மறியல்!

Google Oneindia Tamil News

நாமக்கல்: லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட மின்வாரிய அதிகாரியை விடுதலை செய்யக் கோரி நாமக்கல்லில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி மின்வாரியத்தில் மின்வாரிய உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வராஜ். கடந்த 27ம் தேதி விவசாயி ரங்கநாதன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மின்வாரிய உதவி பொறியாளர் செல்வராஜை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் மின்வாரிய அதிகாரி செல்வராஜ் நேர்மையானவர் என்று கூறிய பொது மக்கள், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், மீண்டும் அதே பொறுப்பில் பணி அமர்த்த வேண்டும் என்றும் கோரி, ராசிபுரம்–ஆத்தூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் மறியலை கைவி்ட்டு கலைந்து சென்றனர்.

English summary
People conducted a road blockage to release the EB officer in Nammakal. EB officer Selvaraj was arrested for getting bribe from a farmer. Later the peace talks of police makes an end to the road blockage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X