For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திண்டுக்கல் பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- கணக்கில் வராத பணம் பறிமுதல்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பத்திர பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.2,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு ஏப்ரல் 1ம் தேதி முதல் நிலங்களுக்கான புதிய வழிகாட்டுதல் மதிப்பை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் நிலங்களின் சந்தை மதிப்பு கணிசமாக உயரும் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 பத்திரங்கள் பதிவாகும் பத்திர பதிவு அலுவலகத்தில், நேற்று மட்டும் 117 பத்திரங்கள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் நாகல்நகர் பத்திர பதிவு அலுவலகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இது குறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

English summary
Vigilance officer made sudden visit to Dindigul register office on last night. Rs.2,000 was seized which is not in the count from there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X