For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி 29 பேர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: சைபீரியா நோக்கி சென்ற ரசிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 29 பேர் பலியானதாக தெரிகிறது.

ரஷ்ய நேரப்படி காலை 5. 30 மணியளவில் இரட்டை இன்ஞ்சின் பொறுத்தப்பபட்ட ஏ.டி.ஆர்., 72 என்ற ரக விமானம் டியூமென் நகரின் அருகில் உள்ள ரோஷ்சினோ விமான நிலையத்தில் இருந்து சூர்குட் நோக்கி சென்ற புறப்பட்டு சென்றது.

இந்த விமானம் புறப்பட்டு சென்ற நில நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து விலகியது. இதனையடுத்து பதட்டமடைந்த விமான அதிகாரிகள் அருகில் உள்ள விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு துறையினருடன் தொடர்பு கொண்டனர்.

இந்நிலையில் மேற்கு சைபீரியாவில் உள்ள டியூமென் நகரில் இருந்து 35 கி,மீட்டர் தொலைவில் விமானம் விழுந்து நொறுங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதில் முதலில் 43 பயணிகளும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 29 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று ரஷ்ய அவசர நிலைக்கான துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
At least 29 people were killed and 14 were rescued alive from a plane crash in Siberia, Russia's state-run Itar-Tass news agency said on Monday, citing a regional emergency situations ministry official. The ATR 72, a twin-engine, turbo-prop plane, with 43 people aboard, crashed some 30-35 km (18-22 miles) from the western Siberian city of Tyumen, Emergency Situations Ministry spokeswoman Irina Andrianova said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X