For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானமா?... அப்ப, 'இ பைலிங்' அவசியம்!

Google Oneindia Tamil News

Income Tax
டெல்லி: ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் தங்களது வருமான வரிக் கணக்கை இ பைலிங் எனப்படும் மின்னணு முறையில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

2010-11 வரை இந்தத் திட்டம் விருப்பத்தின் அடிப்படையில் என்றவகையில் இருந்து வந்தது. அதாவது விரும்பினால் இதில் தாக்கல் செய்யலாம், இல்லாவிட்டால் நேரில் செய்யலாம். ஆனால் தற்போது இதை கண்டிப்பாக்கி விட்டது மத்திய அரசு. கடந்த ஆண்டு இ பைலிங் மூலம் 1.64 வருமான வரிக் கணக்குகள் தாக்கலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அதந்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தினர் மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இ பைலிங் எனப்படும் மின்னணு முறையில் மக்கள் தங்களது வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வது எளிதானது என்பதாலும், வேலை சுலபமாகிறது என்பதாலும் இந்தத்திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும், டிஜிட்டல் கையெழுத்திடுவது என்பது கட்டாயமல்ல என்றும் வருமான வரித்துறை விளக்கியுள்ளது.

English summary
The government has made it mandatory for individuals with income above Rs 10 lakh to file their tax returns 2011-12 onwards electronically. "E-filing has been made compulsory for the person who is an individual, or a Hindu Undivided Family, if his or its total income, or the total income in respect of which he is or it is assessable under the Act during the previous year, exceeds Rs 10 lakh for assessment year 2012-13 onwards," the income tax department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X