வேலைக்காரப் பெண்ணை கர்ப்பமாக்கிய மாஜி நீதிபதி மகன்- கொல்ல முயற்சி- குடும்பத்தோடு கைது!
கட்டாக்: ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் வேலைக்காரப் பெண்ணுடன் உறவு கொண்டு கர்ப்பமாக்கினார் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியின் மகன். பின்னர் தனது குடும்பத்தோடு சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தற்போது கைதாகியுள்ளார்.
சமீர்குமார்ராய் என்பவர் முன்னாள் மாவட்ட கூடுதல் நீதிபதியாவார். அவருக்கு கீதிகா என்ற மனைவியும், சத்யபிரதாராய் என்ற மகனும் உண்டு. திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டு வேலைக்கார பெண்ணுடன் சத்யபிரதா ராய் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒரு பெண்ணுடன் சத்யபிரதாராய்க்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதை தட்டிக் கேட்டதற்காகவே கர்ப்பிணி என்றும் பாராமல் கூலி ஆள் வைத்து அவளை கொலை செய்ய முயன்றதாக செய்தியாளர்களிடம் பேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆளை வைத்து கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக முன்னாள் நீதிபதியும், அவரது மனைவி, மகன் மற்றும் எலக்ட்ரீசியன் பாபினா என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நீதிபதியின் மகன் சத்யபிராத் பிஎல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ஒருமுறை அந்த பெண்ணை கொலை செய்ய முயன்றுள்ளார். அது தோல்வியடையவே கூலி ஆள் வைத்து இரண்டாவது முறையாக கொலை செய்ய முயன்றனர். கூலியாக மூன்றரை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்ணை கடத்திச் சென்ற கூலி ஆட்கள் அவளின் கை, கால்களை கட்டி ஆற்றில் வீசியுள்ளனர். உள்ளூர் ஆட்கள் கண்டு பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications