சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பரிகாரத்துக்காக ஒன்றரை மாத பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிலகுவா நகரைச் சேர்ந்தவர் பாரதி ராணி (35). அவரது கணவர் தினேஷ் குமார். அவர்களுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர்களுக்கு இதற்கு முன்பு பிறந்த குழந்தை குணப்படுத்த முடியாத நோய் வந்து இறந்தது. இதையடுத்து அவர்கள் இந்த குழந்தைக்கும் ஏதாவது நோய் வந்துவிடுமோ என்று ஒரு சாமியாடியைச் சென்று பார்த்துள்ளனர்.
அதற்கு அவர் உங்கள் பெண் குழந்தையை உயிருடன் புதைத்தால் அவர்களின் பிற குழந்தைகள் நோய் நொடியின்றி வாழும் என்று பரிகாரம் கூறியுள்ளார். இதை நம்பி அந்த தம்பதி தங்கள் குழந்தையை புதைக்க மயானத்திற்கு சென்றனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் மயானத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அதன் பெற்றோர் மற்றும் உறவினரை கைது செய்தனர்.
இந்த பரிகாரத்தை பரிந்துரைத்த சாமியாடி இன்னும் கைது செய்யப்படவில்லை. சாமியாடி பேச்சைக்கேட்டு பாரதி தனது குழந்தையை உயிருடன் புதைத்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்ததால் குழந்தையை உயிருடன் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications